Tuesday, September 7, 2010

மெரினா கடற்கரையில் "திலகர் திடல்' கல்வெட்டு - தினமணிச் செய்தி

 சென்னை மெரினா கடற்கரையில் அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள "திலகர் திடல்' நினைவு கல்வெட்டு.

சென்னை, ஜன. 26, 2010: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் அரசு சார்பில் "திலகர் திடல்' நினைவு கல்வெட்டு  நிறுவப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் மாநில கல்லூரி எதிரே, கண்ணகி சிலை அருகே உள்ள வெட்டவெளியான பகுதி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்திய புண்ணிய தலமாகும்.

இந்த இடத்தில் மகாத்மா காந்தி 7 முறை பொதுக்கூட்டங்களில் பேருரையாற்றியது வரலாற்று நிகழ்வு.ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் "ஒத்துழையாமை இயக்கம்' குறித்து காந்தி இந்த இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்ற முழக்கத்தை நமக்குத் தந்த மாபெரும் தலைவர் லோக மான்ய பாலகங்காதர திலகர். ஆங்கிலேயரை எதிர்த்து சிம்மகர்ஜனை செய்த வீரபூமி இது.இதன்பின் 1908}ம் ஆண்டில், திலகரின் நினைவாக சுப்பிரமணிய சிவா மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் இந்த இடத்துக்கு "திலகர் கட்டம்' என்று பெயர் சூட்டினர்.

திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது பல்வேறு இலக்கிய படைப்புகள் உருவாகக் காரணமான "பாசறையாக' இந்த இடம் திகழ்ந்தது.பாரதத் தாயின் வீரப் புதல்வர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், லாலா லஜபதி ராய், சி.ஆர். தாஸ், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், விபின் சந்திரபால், நேரு, ராஜாஜி, ஜி. சுப்பிரமணிய அய்யர், எஸ். சீனுவாச அய்யங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, காமராஜர், ம.பொ.சி.  உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்த இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளனர். 

துர்காபாய் தேஷ்முக் தலைமையில் இந்த இடத்தில் ஏராளமான பெண்கள் திரண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது மற்றொரு முக்கிய சிறப்பு ஆகும்.இந்த இடத்தை சுதந்திரப் போராட்ட நினைவாக "திலகர் கட்டம்' என்று வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் விடுதலை சின்னமாக கல்வெட்டு நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், பாரத மணி இதழின் ஆசிரியரும், காந்தி தரிசன கேந்திரத்தின் தலைவருமான பி.என். சீனிவாசன் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் வழக்கறிஞர் ஆர். காந்தி ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கில், "திலகர் கட்டம்' நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது மெரினா கடற்கரையில் "திலகர் திடல்' கல்வெட்டு "சப்தமின்றி'நிறுவப்பட்டுள்ளது.

நன்றி - தினமணி

திலகர் திடல் குறித்து வெங்கட் சாமிநாதன்

’சிவாஜி சிலை அமைவிடம்: ஓர் அரசின் தவறு’ என்ற கட்டுரையில் திலகர் திடல் குறித்து வெங்கட் சாமிநாதன் எழுதியது இங்கே-

நான் தொடக்கத்திலேயே சொன்னேனே, ஒரு மெல்லிய குரல், ஒரு நோஞ்சான் உடம்பு என்ன செய்யக்கூடும் என்று. அமரராகி விட்ட அந்தநோஞ்சான் கிழவர் வழியில் தன் எண்ணங்களையும் செயல்களையும் அமைத்துக்கொண்டுள்ள இன்னொரு நோஞ்சான் கிழவர், ஒரு காங்கிரஸ்தியாகி, எளிய தொண்டர், எண்பது வயது மீறிய பி.என். ஸ்ரீனிவாசன், சென்னையின் புறநகரில் தன் பாட்டில் தனித்து எதுவும் வேண்டாதுவாழ்ந்து வருபவர். காங்கிரஸ் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் மான்யத்தைக் கூட வேண்டாம், அதற்காக நான் போராடவில்லை என்றுஇருப்பவர். பழம் காங்கிரஸ் தியாகிகள் நலனுக்காக ஒரு அமைப்பை நடத்தி வருபவர், பாரதமணி என்னும் ஒரு நோஞ்சான் பத்திரிகை நடத்திவருபவருக்குத் தான் இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

அவர் தான் முன்னர் திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் ஒன்றுமில்லாது செய்துவிடும் சீரணி அரங்கம் திரும்ப புனரமைக்கப்படுவதுபற்றியும் கவலை கொண்டவர். திலகர் திடல் ஒரு தொடர்ந்த நீண்ட சரித்திரம் பெற்ற இடம். முதன் முதலாக பாரதியார் தான் ஒரு மேஜையைத்தூக்கி எடுத்துச் சென்று அங்கு கூட்டம் நடத்தியவர். இனி இது திலகர் திடல் என்று அறியப்படவேண்டும் என்று அவர் பிரகடனம் செய்ததுபாரதியின் குரல்ஙில்தான். இது நிகழ்ந்தது சூரத் காங்கிரஸ் நடந்த சமயத்தில். சுப்பிரமணிய சிவா பேசிய இடம் அது. பிபின் சந்திர பால் பேசியஇடம் அது. அக்காலத்தில் நடந்த எந்தப் பெரிய காங்கிரஸ் போராட்ட நிகழ்வும் நிகழ்ந்த இடம் அது. சீரணி அரங்கு அந்தச் சரித்திரத்தைத்தமிழர் மறக்கச் செய்துவிட்டது. இந்தச் செய்திகளை நான் ஸ்ரீனிவாசனிடமிருந்தே தெரிந்துகொண்டேன்.

இதையெல்லாம் நினைவு வைத்திருப்பவர் அவர் ஒருவர்தான் போலும். இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் 20 பேரோ, முப்பது பேரோஇருக்கிறார்களே அவர்களுக்கு ஏன் இந்த உணர்வே இல்லாது போய்விட்டது?. அந்தச் சரித்திரமும் சரித்திரத் தடங்களும் அழிவது பற்றி ஏன்எந்தக் காங்கிரஸ் காரருக்கும் கவலை இல்லாது போய்விட்டது? காந்தி முதன்முதலாகச் சென்னை வந்து தங்கியிருந்த வீடு அழிந்து இன்று அந்தஇடத்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிற்க்ஙிறது. எத்தனை ஸ்டார் என்று எனக்குத் தெரியாது. அதன் ஒரு மூலையில், சுற்றுச் சுவரை ஒட்டி,நடைபாதைக்கு அருகே இந்த செய்தியைத் தாங்கிய கல் பதித்த ஒரு நினைவுச் சின்னத்தைப் பார்க்கலாம் இப்போது. நான் முதலில் அதைப்பார்த்த போது மிக வேதனையாக இருந்தது. வரலாறும் வரலாறு பதிந்த இடங்களும், நம் நினைவுகளிலிருந்து அழிந்து மறைந்துவருகின்றன.

இப்போது எது நடக்கும் என்று தெரியவில்லை. திலகர் திடல் என்ற பெயர் திரும்ப நினைவூட்டப்படுமா? அல்லது சீரணி அரங்கு திரும்பமுளைக்குமா தெரியவில்லை. இந்நிலையில் தனி ஒரு மனிதராக ஒரு கிழவர் தான் செய்யவேண்டியது என்ன என்று நினைத்தாரோ அதைச்செய்யத் துணிந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார். தானும் சிவாஜி கணேசனை மதிப்பவர்தான் என்றும் அவருக்குநினைவுச் சின்னம் எழுப்பப்படுவதன் மகிழ்ச்சியை இதர தமிழர்களோடு தானும் பகிர்ந்துகொள்வதாகவும் ஆனால், அந்தச் சின்னம்எழுப்பப்படும் இடம் போக்குவரத்துக்கும், அது பற்றிய விதிகளுக்கும் புறம்பாகவிருப்பதாலும், மேலும் காந்தி சிலையின் நேர் எதிரே சிவாஜியின்சிலையை வைப்பது காந்தி சிலையின் முக்கியத்துவத்திற்கு இடையூறாக இருக்கும் என்றும் தன் மனுவில் கோரியுள்ளார். அந்தப் பழம் பெரும் தியாகியின் ஒற்றைக் கிழக்குரலைத் தவிர வேறு யார் குரலும் கேட்கவில்லை. திண்டிவனம் ராமமூர்த்தி குரல் எழுந்ததாகவும் அது அடக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. தெரியாது.

==================================

முழுக் கட்டுரை இங்கே- http://sify.com/cities/bhopal/fullstory.php?id=14254051&page=1

நன்றி- சிஃபி.காம்

மெரினா கடற்கரையில் "திலகர் திடல்' கல்வெட்டு - சென்னைலைவ் செய்தி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் அரசு சார்பில் "திலகர் திடல்' நினைவு கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் மாநில கல்லூரி எதிரே, கண்ணகி சிலை அருகே உள்ள வெட்டவெளியான பகுதி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்திய புண்ணிய தலமாகும்.

இந்த இடத்தில் மகாத்மா காந்தி 7 முறை பொதுக்கூட்டங்களில் பேருரையாற்றியது வரலாற்று நிகழ்வு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் "ஒத்துழையாமை இயக்கம்' குறித்து காந்தி இந்த இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்ற முழக்கத்தை நமக்குத் தந்த மாபெரும் தலைவர் லோக மான்ய பாலகங்காதர திலகர். ஆங்கிலேயரை எதிர்த்து சிம்மகர்ஜனை செய்த வீரபூமி இது.

இதன்பின் 1908}ம் ஆண்டில், திலகரின் நினைவாக சுப்பிரமணிய சிவா மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் இந்த இடத்துக்கு "திலகர் கட்டம்' என்று பெயர் சூட்டினர்.

திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது பல்வேறு இலக்கிய படைப்புகள் உருவாகக் காரணமான "பாசறையாக' இந்த இடம் திகழ்ந்தது.

பாரதத் தாயின் வீரப் புதல்வர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், லாலா லஜபதி ராய், சி.ஆர். தாஸ், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், விபின் சந்திரபால், நேரு, ராஜாஜி, ஜி. சுப்பிரமணிய அய்யர், எஸ். சீனுவாச அய்யங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, காமராஜர், ம.பொ.சி. உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்த இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளனர். துர்காபாய் தேஷ்முக் தலைமையில் இந்த இடத்தில் ஏராளமான பெண்கள் திரண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது மற்றொரு முக்கிய சிறப்பு ஆகும்.

இந்த இடத்தை சுதந்திரப் போராட்ட நினைவாக "திலகர் கட்டம்' என்று வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் விடுதலை சின்னமாக கல்வெட்டு நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால், பாரத மணி இதழின் ஆசிரியரும், காந்தி தரிசன கேந்திரத்தின் தலைவருமான பி.என். சீனிவாசன் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் வழக்கறிஞர் ஆர். காந்தி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில், "திலகர் கட்டம்' நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது மெரினா கடற்கரையில் "திலகர் திடல்' கல்வெட்டு "சப்தமின்றி'நிறுவப்பட்டுள்ளது.

நன்றி - http://chennailive.net/chennainews/index.php?id=1160
Published on 26-Jan-2010

திலகர் திடலில் பெயர்ப் பலகை வைக்க உத்தரவு - தினமணிச் செய்தி

சென்னை, அக். 6, 2009: சென்னை மெரினாவில் உள்ள திலகர் திடலில் பெயர்ப் பலகை வைக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி தெரிவித்தார்.  மகாத்மா காந்தி, சுப்பிரமணிய சிவா, கக்கன் ஆகியோரின் பிறந்த நாள் விழா, மெரினாவில் உள்ள ""திலகர் திடலில்'' ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. காமராஜர் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.  

""திலகர் கட்டம் என்ற இந்த இடத்துக்கு அரசியல் அங்கீகாரம் அளித்து பெயர்ப் பலகை நிறுவ உத்தரவிட வேண்டும், இல்லையென்றால், நீதிமன்றமே பெயர்ப் பலகை அமைக்க உத்தரவிடும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது'' என்றார் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி.  

""மக்களிடையே தேசபக்தி வலுப்பெற தேசியச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த நிலையில், திலகர் கட்டம் என்ற இடத்திற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டை நிறுவுவதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்றார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி. சேகர்.  

""பாலகங்காதர திலகர், நேதாஜி, காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இந்தத் திடலில் பேசியுள்ளனர். மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு இதே திலகர் கட்டத்தில் தான் அறைகூவல் விடுத்தார். இதை வருங்கால சந்ததியினர் நினைவில் கொண்டு தேச பக்தியை வளர்த்துக் கொள்ள திலகர் திடல் பெயர்ப் பலகை நிறுவப்பட வேண்டும்'' என்றார் காந்தி தரிசன கேந்திரத் தலைவரும், பாரத மணியின் ஆசிரியருமான பி.என். சீனிவாசன்.  

குமரி அனந்தன் வேண்டுகோள்:   முன்னதாக, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், ""சுப்பிரமணிய சிவாவின் கனவான பாரத மாதா ஆலயத்தை பாப்பாரப்பட்டியில் நிறுவ அனைவரும் உதவி புரிய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

நன்றி- தினமணி

திலகர் திடல் கல்வெட்டு