Tuesday, September 7, 2010

திலகர் திடல் குறித்து வெங்கட் சாமிநாதன்

’சிவாஜி சிலை அமைவிடம்: ஓர் அரசின் தவறு’ என்ற கட்டுரையில் திலகர் திடல் குறித்து வெங்கட் சாமிநாதன் எழுதியது இங்கே-

நான் தொடக்கத்திலேயே சொன்னேனே, ஒரு மெல்லிய குரல், ஒரு நோஞ்சான் உடம்பு என்ன செய்யக்கூடும் என்று. அமரராகி விட்ட அந்தநோஞ்சான் கிழவர் வழியில் தன் எண்ணங்களையும் செயல்களையும் அமைத்துக்கொண்டுள்ள இன்னொரு நோஞ்சான் கிழவர், ஒரு காங்கிரஸ்தியாகி, எளிய தொண்டர், எண்பது வயது மீறிய பி.என். ஸ்ரீனிவாசன், சென்னையின் புறநகரில் தன் பாட்டில் தனித்து எதுவும் வேண்டாதுவாழ்ந்து வருபவர். காங்கிரஸ் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் மான்யத்தைக் கூட வேண்டாம், அதற்காக நான் போராடவில்லை என்றுஇருப்பவர். பழம் காங்கிரஸ் தியாகிகள் நலனுக்காக ஒரு அமைப்பை நடத்தி வருபவர், பாரதமணி என்னும் ஒரு நோஞ்சான் பத்திரிகை நடத்திவருபவருக்குத் தான் இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

அவர் தான் முன்னர் திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் ஒன்றுமில்லாது செய்துவிடும் சீரணி அரங்கம் திரும்ப புனரமைக்கப்படுவதுபற்றியும் கவலை கொண்டவர். திலகர் திடல் ஒரு தொடர்ந்த நீண்ட சரித்திரம் பெற்ற இடம். முதன் முதலாக பாரதியார் தான் ஒரு மேஜையைத்தூக்கி எடுத்துச் சென்று அங்கு கூட்டம் நடத்தியவர். இனி இது திலகர் திடல் என்று அறியப்படவேண்டும் என்று அவர் பிரகடனம் செய்ததுபாரதியின் குரல்ஙில்தான். இது நிகழ்ந்தது சூரத் காங்கிரஸ் நடந்த சமயத்தில். சுப்பிரமணிய சிவா பேசிய இடம் அது. பிபின் சந்திர பால் பேசியஇடம் அது. அக்காலத்தில் நடந்த எந்தப் பெரிய காங்கிரஸ் போராட்ட நிகழ்வும் நிகழ்ந்த இடம் அது. சீரணி அரங்கு அந்தச் சரித்திரத்தைத்தமிழர் மறக்கச் செய்துவிட்டது. இந்தச் செய்திகளை நான் ஸ்ரீனிவாசனிடமிருந்தே தெரிந்துகொண்டேன்.

இதையெல்லாம் நினைவு வைத்திருப்பவர் அவர் ஒருவர்தான் போலும். இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் 20 பேரோ, முப்பது பேரோஇருக்கிறார்களே அவர்களுக்கு ஏன் இந்த உணர்வே இல்லாது போய்விட்டது?. அந்தச் சரித்திரமும் சரித்திரத் தடங்களும் அழிவது பற்றி ஏன்எந்தக் காங்கிரஸ் காரருக்கும் கவலை இல்லாது போய்விட்டது? காந்தி முதன்முதலாகச் சென்னை வந்து தங்கியிருந்த வீடு அழிந்து இன்று அந்தஇடத்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிற்க்ஙிறது. எத்தனை ஸ்டார் என்று எனக்குத் தெரியாது. அதன் ஒரு மூலையில், சுற்றுச் சுவரை ஒட்டி,நடைபாதைக்கு அருகே இந்த செய்தியைத் தாங்கிய கல் பதித்த ஒரு நினைவுச் சின்னத்தைப் பார்க்கலாம் இப்போது. நான் முதலில் அதைப்பார்த்த போது மிக வேதனையாக இருந்தது. வரலாறும் வரலாறு பதிந்த இடங்களும், நம் நினைவுகளிலிருந்து அழிந்து மறைந்துவருகின்றன.

இப்போது எது நடக்கும் என்று தெரியவில்லை. திலகர் திடல் என்ற பெயர் திரும்ப நினைவூட்டப்படுமா? அல்லது சீரணி அரங்கு திரும்பமுளைக்குமா தெரியவில்லை. இந்நிலையில் தனி ஒரு மனிதராக ஒரு கிழவர் தான் செய்யவேண்டியது என்ன என்று நினைத்தாரோ அதைச்செய்யத் துணிந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார். தானும் சிவாஜி கணேசனை மதிப்பவர்தான் என்றும் அவருக்குநினைவுச் சின்னம் எழுப்பப்படுவதன் மகிழ்ச்சியை இதர தமிழர்களோடு தானும் பகிர்ந்துகொள்வதாகவும் ஆனால், அந்தச் சின்னம்எழுப்பப்படும் இடம் போக்குவரத்துக்கும், அது பற்றிய விதிகளுக்கும் புறம்பாகவிருப்பதாலும், மேலும் காந்தி சிலையின் நேர் எதிரே சிவாஜியின்சிலையை வைப்பது காந்தி சிலையின் முக்கியத்துவத்திற்கு இடையூறாக இருக்கும் என்றும் தன் மனுவில் கோரியுள்ளார். அந்தப் பழம் பெரும் தியாகியின் ஒற்றைக் கிழக்குரலைத் தவிர வேறு யார் குரலும் கேட்கவில்லை. திண்டிவனம் ராமமூர்த்தி குரல் எழுந்ததாகவும் அது அடக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. தெரியாது.

==================================

முழுக் கட்டுரை இங்கே- http://sify.com/cities/bhopal/fullstory.php?id=14254051&page=1

நன்றி- சிஃபி.காம்

No comments:

Post a Comment